சூரியனே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளுக்காக பகலில் நீ வெளிச்சம் தருவதால்,
சந்திரனே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் முகம் போல் நீ இருப்பதால்,
கடல் முத்தே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் முக பரு முன்னால் பொலிவிழந்து போனதால்,
கொம்பு தேனே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி
என்னவளின் எச்சில் சுவைக்கு முன்னால் நீ கசந்ததால்.
நதியே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி
என்னவளின், வளைவு, நெளிவு கண்டு வெட்கப்பட்டதால்.
கார் மேகமே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் சிகை அழங்காரம் முன்னால் நீ தோற்றதால்.
மரமே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவலுக்காக, மூச்சி காற்றை நீ தருவதால்,
தென்றலே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின், தாவணி வருடலின் முன்னால் தலை குனிந்ததால்.
வானமே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின், நினைவலையை, எழுதி முடிப்பதற்குள் நீ முடிந்து போனதால்,
கடவுளே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளை, படைக்க நீ மேல் படிப்பை மேற்கொண்டதால்,
என் இதயமே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின், நினைவலையை மட்டும் நீ சுமந்திருப்பதால்!!!!!!!!.