Advertisement

சென்று வருகிறேன்

விட்டுப் பிரிந்த நினைவுகளும்
தொட்டு தொலைந்த கனவுகளும்

கையை விட்டு கரைந்தாலும்
காலங்கள் போட்டு வைத்த
கணக்கில்லா புள்ளிக்கோலங்களில்
கரைந்து காணாமலே போகிறேன்

என்றாவது என் சொற்கள்
உன் நினைவலைகளை மோதிச்செல்லும்...
அந்த நொடியினில் அரைகுறையாய்
என் ஞாபகம் வந்து செல்லும்..

எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகள்
எப்படியும் நான் இருந்தேன் என்று
உனக்கு சொல்லிவிடும்.

அந்த நேரம் அருகில் அமர்ந்து
ஆறுதல் சொல்ல நானிருக்கமாட்டேன்...

அகமும் புறமும் உணர்ந்த நாம்
முகமே பார்க்க முடியாது போயிருக்கும்
சுழலும் கால சக்கரத்தில்
என் நினைவு தூசிகளும்
எங்கோ சென்றிருக்கும் உன்னை விட்டு...!