Advertisement

வினா எண். 28 முதல் 34 வரை உரைநடை குறுவினா பிரிவு-II பகுதி-2

1. கல்விப் படங்களின் வாயிலாக நாம் அறிவன யாவை? (இயல் - 5) பல்வகை விலங்குகளின் வாழ்க்கை, பன்னாட்டு மக்களின் வாழ்க்கை நேரில் காண முடியாத பல இடங்கள் ஆகியவற்றைக் கண்டு அறியலாம்.

2. கொடுங்கடலால் கொள்ளப்பட்ட தமிழகப் பகுதிகள் யாவை? (இயல் - 1) குமரிமலை, பஃறுளி ஆறு.

3. ஏற்றுமதி இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை? (இயல் - 6) பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி.

4. இயேசுவின் மலைப்பொழிவு நூலைப் படித்துக் காந்தியடிகள உணர்ந்தது என்ன? (இயல்8) தீயவனை எதிர்க்காதே, அவனிடம் உள்ள தீமையை எதிர்த்து நில். பகைவனிடமும் அன்பு பாராட்ட வேண்டும்.

5. காந்தியடிகளுக்கு இளம்பருவத்திலேயே இயல்பாக அமைந்த உயர்பண்புகள யாவை? அன்பு, உண்மை, உறுதி, இன்னா செய்யாமை. (இயல்8)

6. இந்தியாவின் வாழ்வு குறித்துக் காந்தியடிகள் கூறுவது யாது? (இயல் - 8) இந்தியாவின் வாழ்வு இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வு என்றாள் காந்தியடிகள்.

7. சத்திய தாமசாலையில் வள்ளலார் செய்த தொண்டு யாது? (இயல் - 9) சாதி, மத வேறுபாடின்றிட் பசித்தோர்க்கெல்லாம் உணவிட்டார்.

8. ஒவ்வொருவரும் குறைந்தது எக்கல்வித் தகுதியினைப் பெறுதல் வேண்டும்?(இயல்10) மேல்நிலைக் கல்வித்தகுதி. அதுவே அடிப்படைக் கல்வித்தகுதி ஆகும்.

9. தற்போது வளர்ந்துவரும் இரண்டு தொழில்நுட்பத்துறைகள் யாவை? (இயல் - 10) உயிரி தொழில்நுட்பத்துறை, நுண்ணியல் தொழில்நுட்பத்துறை.

10. பட்டப்படிப்புகள் எவையேனும் நான்கினை எழுதுக. (இயல் - 10) பி.ஏ. - தமிழ் இளங்கலை பி.எஸ்சி - இளம் அறிவியல் பி.காம் - இளம் வணிகவியல் பி.எட் - இளம் கல்வியல்


(கீழ்க்காணும் வினாக்களுக்கு எளிமையான முறையில் விடை தயார் செய்து பயிற்சியளிக்கவும்)


1. உலகில் உள்ள மொழிகளுள் இலக்கிய, இலக்கண வளமுடைய மொழிகள் எத்தனை? யல் - 1
ன்ேஃ. குறித்து முனைவர் எமினோ கூறுவது யாது? (இயல் - 1)
2. ஒரு மொழி நிலைபெற்று நிற்பதற்குரிய தகுதிப்பாடுகள் யாவை? (இயல் - 1)
3. மொழி மாற்றம் என்றால் என்ன? (இயல் - 5)
4. ஞாலம் - பெயர்க்காரணம் கூறுக. (இயல் - 7)
5. கண்ணிடந்து அப்பியவர் யார்? அவர் வரலாறு உணர்த்தும் செய்தி யாது?(இயல் 7)
6. அமெரிக்க இதழாசிரியரிடம் காந்தியடிகள் பற்றிப் பெண்மணி கூறியது யாது? (இயல் 8)
7. இடைநிலையாசிரியர் பயிற்சி குறித்து எழுதுக. (இயல் - 10)
8. டிேகளைக் கவர்ந்த குஜராத் பாடலின் கருத்து யாது? (இயல் - 8)
9. காந்தியடிகள் அறவழிப்போராட்டத்தில் உருவான இயக்கங்கள் யாவை?(இயல் - 8)
10. காந்தியடிகள் எதனைப் பாவம் என்கிறார்?(இயல் - 8)
11. இராமலிங்கர் எங்கு எப்போது பிறந்தார்?(இயல் - 9)
12. வளரும் பிள்ளைகளுக்கு இராமலிங்கர் வழங்கிய அறிவுரைகளுள் இரண்டனைக் கூறுக. (இயல்-9)
13. திரைப்படச்சுருள் பற்றி நீவிள் அறிவன யாவை? (இயல் - 5)

14. எவற்றை அறநெறியாகப் போற்ற வேண்டும் எனக் காந்தியடிகள் கூறினார்? (இயல் - 8)