சோமாலியா குழந்தைகளுக்கு சொத்தில் பாதி: ஏ.ஆர்.ரஹ்மான்! மாஷா அல்லாஹ்!
சோமாலிய முஸ்லிம்களை கண்டுகொள்ளாத நம் சமூதாயத்தில் விதி விளக்கு A.R.Rahman.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் அவார்டு வாங்கிய தமிழன். இதோ மீண்டும் 2016&க்கான ஆஸ்கர் விருதும் ஓ.கே. ஆகிவிட்டது.
தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்துக் கொண்ட ரஹ்மான் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவரது சம்பளம் பல மில்லியன் கோடிகள்.
எங்கு எந்த நாட்டில் இருந்தாலும், ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக நிறைவேற்றுவார். அதே போல எந்த நாட்டில் இருந்தாலும் ரம்ஜான் நோன்பு கட்டாயமாக இருந்து விடுவார்.
தான தர்மம் செய்வதிலும் தயாள குணம் கொண்டவர் ரஹ்மான். ஒரு இசை முயற்சிக்காக சோமாலியா சென்றார் ரஹ்மான். அங்கு 3000 ஆண்டு பழமையான இசைக் கருவிகள் புழக்கத்தில் இருந்து வருகிறது.
மூன்று வருடங்கள் பழகினால் மட்டுமே அந்த கருவியை வாசிக்க முடியும். ரஹ்மான் அந்த கருவியை பார்த்து ஒரு டஜன் வாங்கிக் கொண்டார். விலைபேசி வாங்கியும் கொண்டார்.
ஆனால், பரிதாபம் 3000 வருட பாரம்பரிய இசைக்கருவி சில நூறுகளே…! பார்த்தார் ரஹ்மான். இந்த இசைக்கருவிகளுக்கு சில நூறுகள் விலை என்பது அவமானம். இது விலைமதிப்பில்லாத கருவி.
வறுமை, பசி, பட்டினியால் வாடும் சோமாலியா குழந்தைகள் நலனுக்காக பல கோடிகளை நன்கொடையாக கொடுத்து விட்டார். ஆடிப்போனது சோமாலியா அரசு. அவர்களால் நம்பவே முடியவில்லை.
சோமாலியா பிரதமர் அழுதே விட்டார். சட்டென்று ரஹ்மான் கால்களில் விழப்போனார். பதறிப் போய் தடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஒரே ஒரு வார்த்தை சொன்னார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே…!