Advertisement

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக வெண்ணிநம்மை தூறுசெய்த பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லேகொண்ர்ந்து நண்பரூட்டு பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த்வேற் படைகள்வந்த பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற் பொதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே

- பாரதியார்

English Version 1

Fear not my soul. Fear not
Fear not when the world unites against
Fear not the derisive stares and the looks cold
Fear not the vagrant’s life,
When you’ve lost everything you hold
Fear not my soul. Fear not
Fear not the seductress’s charms
Fear not the venom, nor the burning tongue
Fear not the enemy, taking up arms
Fear not my soul. Fear not.
When the world around you comes crashing down.

English Version 2

I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Though the entire world stands united against me,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Though I’m belittled and vilified,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Though I’m reduced to live by begging for food,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Though I’ve lost everything that I yearned for,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Even though busty maids look at me with scorn and disdain
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Even if my own friends try to poison me,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Even when confronted by an aggressor’s uniformed armies,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Even if the sky falls on my head,

- Bharathiar