ஆம், இதை சொல்வதில் எனக்கு ஒன்றும் வெட்கம் இல்லை…
நீண்ட நாட்களாக அவளுடன், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத அளவுக்கு அன்பு வைத்துள்ளேன், அவள் கணவனாலும் சரி.அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும் எனக்கும் அவளை பார்த்த முதல் நாளிலிருந்தே மிகவும் பிடித்து இருந்தது. நான் கல்லூரி சென்ற காலத்தில் விடுமுறை நாட்க்கள் என்றால் போதும் அவளை சந்திக்க கிளம்பிவிடுவேன், அவளை அழைத்து கோவிலுக்கு சென்றிருக்கிறேன் பலமுறை. அவளுக்கு என்மீது அதீத அன்பு. அவள் கணவனை விடவும் என்னையே அதிக அக்கறையுடன் கவனித்து கொள்வாள், அவ்வளவு அன்பு என்மீது. எனக்கு காசு தேவை என்றால் அவள் கணவருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து காசு எடுத்து கொடுப்பாள், என்னிடம் ஒரு நாளும் அவள் எதையும் எதிர்பார்த்தது இல்லை.நான் வருத்தப்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு ஆறுதலாக இருப்பாள் ,நன்றாக சமைக்க தெரியும் அவளுக்கு, நான் ஆசைபட்டதை எல்லாம் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் சமைத்து கொட்டுவாள், ஏன் எனக்கு கொடுக்கும் அந்த அளவு முக்கியதுவத்தை அவள் கணவருக்கு கொடுப்பதில்லை என்று இன்றளவு நினைக்கயிலும் எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது.
எனக்கு அவளுடன் 24 வருட இணைபிரியா உறவு உள்ளது.
என்ன அவளுக்கு தான் என் தந்தை உடன் திருமண முடிக்கப்பட்டது. நான் அவளை இன்றளவும் அம்மா என்றே அழைக்கிறேன்!😜
….
….
பின்ன என்னங்க எப்பொழுதும் திருமணமான உறவு என்றால் தவறான எண்ணத்தையே போதிக்கிறார்கள். ஒருவேளை அதில் தான் சுவாரசியம் அதிகமோ என்னவோ…நமக்கு எதுக்கு அந்த வம்பு…
எனக்கு ஒன்று புரியவில்லை…திருமணமானவருக்கு ஏற்கனவே உறவு இருக்கும், நீங்கள் கொள்ளும் தகாத உறவு , உங்களை நம்பி வாழ வருவோருக்கு நீங்கள் செய்யும் துரோகம் மற்றும் உங்களை பெற்றெடுத்த தாயின் நற்பெயருக்கு நீங்கள் ஏற்படுத்தும் களங்கம் இல்லையா? ஒரு வேலை உங்களை திருமணம் செய்து கொண்டவர் இது போன்ற தகாத உறவில் இருந்தால் நீங்கள் அதை ஏற்று கொள்வீர்களா?
பதிலுக்கு காத்திருக்கிறேன்!!!
நன்றிகள்…