Advertisement

'கற்க வயது ஒரு தடையல்ல'

'கற்க வயது ஒரு தடையல்ல' ''கற்பதற்கு வயது ஒரு தடையல்ல; படிக்காதவர்கள், 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில், தங்களை இணைத்து கொள்ள வேண்டும்,'' என, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் பேசினார். 

நரசிம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கல்பனா வரவேற்றார்

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் பேசுகையில், ''கல்லாதவர்கள் எப்போதும், அடுத்தவர்களின் உதவியை நாடியே இருக்க வேண்டும். இதனால், வாழ்க்கையில் பெரும் சிக்கல்கள் ஏற்படலாம். கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. எந்த வயதில் வேண்டுமானாலும் கற்கலாம். அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டத்தில், கல்லாதவர்கள் அனைவரும் இணைந்து, கல்வி கற்றவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள் நடத்தும் வகுப்புகளில், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்,''என்றார். 

திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து, வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் தமிழ்செல்வி விளக்கினார்.