Advertisement

தமிழாராய்ச்சி நிறுவனம் நூல்கள் விற்க சலுகை

சென்னை, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், 50 சதவீதம் வரை சலுகை விலையில் நுால்கள் விற்கப்படுகின்றன.  


உலக தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு, இந்தாண்டு பொன் விழா.


இதுதொடர்பான, விழாவில் பங்கேற்ற, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள நுால்களை, அனைவரும் வாங்க, சலுகை விலையில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என, அறிவித்தார்.


இதையடுத்து, இந்த மாதமும், அடுத்த மாதமும், உலக தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகளான, இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக் கணிதம் உள்ளிட்ட தலைப்புகளில் அமைந்துள்ள நுால்கள், அகராதி, அரிய நுால்கள், போட்டி தேர்வுகளுக்கான கருவி நுால்கள் ஆகியவை, 30 முதல், 50 சதவீத தள்ளுபடியில் விற்க, நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.


புத்தக விற்பனை, திங்கள் முதல் சனி வரை, காலை, 10:00 முதல், மாலை, 5:30 மணி வரை நடைபெறும். நுால்களை, 'உலக தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை ~ 113' என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 044~ ~ 2254 2992, 2254 0087 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.