Advertisement

வயது வந்தோருக்கு கற்பிக்க புதிய திட்டம்

சென்னை முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வழியே, 15 வயதுக்கு மேற்பட்ட, எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்கப்படுகிறது. 

இதன்படி, முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, தன்னார்வலர்கள் வழியே பயிற்றுவிக்கும், வயது வந்தோர் கல்வி திட்டம், சென்னை மாவட்டத்தில், நேற்று துவங்கப்பட்டது. 

இதில், 395 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 483 கற்போர் கல்வியறிவு மையங்களில், இந்த பணிகள் நடக்கும்; பிப்., 2021 வரை இந்த மையங்கள் செயல்படும்.

தாய்மொழியிலும், ஆங்கிலம் எழுத, படிக்கவும், அடிப்படை கணிதமும் பயிற்றுவிக்கப்படும். இந்த திட்டத்தின் வழியே, 9,655 பேர் பயன் பெறுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.