Advertisement

MBBS படிப்பு நிரம்பிய இடங்கள் விவரம்

மருத்துவ படிப்பில், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், 381 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., ~ பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, நேரு விளையாட்டரங்கில், நவ.,18ல் துவங்கியது

அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு மாணவர்கள் ஒதுக்கீடு முடிந்து, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கிய நிலையில், 'நிவர்' புயலால் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நேற்று துவங்கிய, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கிற்கு, 390 மாணவர்கள் அழைக்கப் பட்டிருந்தனர். அவர்களில், 382 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்; 

381 பேர் விரும்பிய அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றனர். 

தற்போது, அரசு கல்லுாரிகளில், 2,059 எம்.பி.பி.எஸ்., ~ ~ 151 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அதேபோல, சுயநிதி கல்லுாரிகளில், 1,060 எம்.பி.பி.எஸ்., ~ ~ 985 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இன்றைய கவுன்சிலிங்கிற்கு, 451 பேர் அழைக்கப் பட்டு உள்ளனர்.