Advertisement

எந்த நோய்க்கு எந்த பழம் மிகவும் நல்லது? தினமும் ஒரு கப் பழங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றும்!!

எந்த நோய்க்கு எந்த பழம் மிகவும் நல்லது? தினமும் ஒரு கப் பழங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றும்!!

ஏன் பழங்கள் சாப்பிட வேண்டும்?

பொதுவாக பழங்களில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கியமுடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும்,

ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு.

பழங்களில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்துவயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது.

தினமும் ஒரு கப் பழங்கள் சாப்பிடுவதல வரும் நன்மைகள் :

எந்தவகையான பழங்கள் என்றாலும் சரி ஒரு கப் அளவு பழங்களை அதாவது 250 கிராம் அளவிற்கு தினமும் சாப்பிடுவதை கட்டாயமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதனால்எந்த வகையான நோய்களையும் வராமல் தவிர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். நச்சுக்கள் வெளியேறும்.

உடல்உறுப்புகள் சுத்தமாகும். கண் பார்வை தெளிவாகும். முதுமை தள்ளிப் போகும். இவிய நோய்களை தடுப்பது மட்டுமல்ல, நோய்களை குணப்படுத்தவும் செய்கிறது. எந்த உடல்நோயை குணப்படுத்த எந்த பழம் பயன்படுகிறது என பார்க்கலாம்.

ரத்த சோகைக்கு :

அன்னாசி பழத்தில் வைட்டமின் ...பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு

பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.

இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

பித்த நோய்கள் :

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ...ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம்

சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். ப தலை வலி, கண்பார்வைக்குறைவு, பித்தம் காரணமாக

இளநரை, என அனைத்து நோய்களும் குணமாகிறது.நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் கிருமிகளிய அழிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மலச்சிக்கலுக்கு :

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

ஜீரண நோய்களுக்கு

மூலநோய் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம்

சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.

எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.

குழந்தை பேறின்மைக்கு :

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.

வறட்டு இருமலுக்கு :

வறட்டு இருமல் இருந்தால், எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி அந்த நீரை குடியுங்கள். இதேபோல்

தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும்.

தூக்கமின்மைக்கு :

ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி, பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து

தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன்

சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.

பல் தொடர்பான பாதிப்புகள் :

பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு

பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

மாதவிடாய் பாதிப்புகளுக்கு :

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல்

போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இரைப்பை புண்

வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை

ஆற்ற வேண்டும். தினமும் ஒரு வாழைப் பழம் காலை இரவு என் இரு வேளை சாப்பிட்டால் இரைப்பை புண் ஆறும்.

நரம்பு சம்பந்த கோளாறுகளுக்கு :

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய

ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும்.

தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது

வயிற்றுப் போக்கிற்கு

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால்

ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்.

சரும வியாதிகளுக்கு :

சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு

இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

கல்லீரல் கொழுப்பு

கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண விரும்பினால் வைட்டமின் சி நிரம்பிய சிட்ரஸ் பழங்கள் உங்களுக்கு கை கொடுக்க காத்திருக்கின்றன. ஆரஞ்சு

அல்லது எலுமிச்சை சாறுகளை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்துப் பாருங்கள். விளைவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

இதய நோய்களுக்கு :

மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் மிக அதிக அளவில் நார்ச்த்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. இதய நோய்கள் வராமல் இதயத் த்சைகளைக்கு பலம் தருகிறது.

மார்பக புற்று நோய்க்கு :

னமும் இரு அத்திப் பழங்களை சாப்பிட்டால் பெண்களுக்கு வரும் முக்கிய புற்று நோயான மார்பக புற்று நோய் தடுக்கப்படுகிறது. உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

சிறு நீரக கற்களுக்கு :

சிறு நீரக கற்கள் இருப்பவர்கள் தினமும் நாவல் பழங்களை சாப்பிடுவது நல்லது. அத்துடன் நாவல் விதைகளை பொடி செய்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் சிறு நீரக கற்கள் கரையும்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் :

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் பலாபழத்தை சாப்பிடுவதால் தைராய்டு ஹார்மோன் சுரப்பது தூண்டப்படுகிறது.எலும்புகள் வலுவடைகின்றன. இதபால் எலும்பு சம்பந்த நோய்களும் தடுக்கப்படுகிறது.

தர்பூசணி நன்மைகள்

 

சிறுநீரகம் 

கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.

 

கெட்ட கொலஸ்ட்ரால்

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.

பழங்கள்... நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும். அன்றாடம் பழங்களைச் சாப்பிடுவதால் புற்று நோய், இருதய நோய், மாரடைப்பு, மறதி, காட்ராக்ட் மற்றும் மூப்பில் வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கலாம். பழங்களைச் சாப்பிடுவதால் நமக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.