Advertisement

10TH-TAMIL-2023-24-PUBLIC MODEL QUESTION - 2

10TH-TAMIL-2023-24-PUBLIC MODEL QUESTION - 2

அரசு பொதுத் தேர்வு – 2024 / பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம் 

 தமிழ் – மாதிரி வினாத்தாள் – 2

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

          ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.                                  பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                          15×1=15

1. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ________

அ) குலை வகை ஆ) மணிவகை இ) கொழுந்து வகை ஈ) இலை வகை

2. பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும். இப்புதிருக்கான சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

அ)  நவீனம்            ஆ) புரட்சி               இ) போராட்டம்                  ஈ) புதுமை

3. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்                ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்     

இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்               ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

4. “ பிரிந்தன புள்ளின் கானில்

    பெரிதழுது இரங்கித் தேம்ப     - பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க

அ) கிளை, துளை ஆ) நிலம்,வாட     இ) காடு,வாட          ஈ) காடு,  நிலம்

5. பெயரெச்சத் தொடரை தேர்க.

அ) இனியன் கவிஞர்                    ஆ) குயில் கூவியது

இ) அன்பால் கட்டினார்                ஈ) கேட்ட பாடல்

6. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா                 ஆ) சீலா                 இ) குலா       ஈ) இலா

7. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

     நாள்தொறும் நாடு கெடும் – சீர்மோனைச் சொற்களைத் தேர்க

அ) நாடி - முறைசெய்யா    ஆ) நாள்தொறும் - மன்னவன்                

இ) நாள்தொறும் - முறை    ஈ) நாள்தொறும் - நாடி

8. பழமொழியைப் பொருத்துக:-

அ) ஆறில்லா ஊருக்கு      -        1. சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஆ) உப்பில்லாப் பண்டம்     -        2. நூறு வயது

இ) நொறுங்க தின்றால்       -        3. குப்பையிலே

ஈ) ஒரு பானை                  -        4. அழகு பாழ்

அ) அ-4. ஆ-1, இ-3, ஈ-2            ஆ) அ-4, ஆ-3, இ-2, ஈ-1

  இ) அ-2, ஆ-4, இ-1, ஈ-3           ஈ) அ-3, ஆ-1, இ-4, ஈ-2

9. திருச்சிராப்பள்ளி,கோயம்புத்தூர்,புதுச்சேரி,திருநெல்வேலி – இவ்வூர்ப் பெயர்களின் சரியான ‘ மரூஉ ‘ வரியைத் தேர்க.

அ) திருச்சி, புதுவை, நெல்லை, உதகை    ஆ) திருச்சி , கோவை, புதுவை, நெல்லை

இ) நெல்லை, உதகை, திருச்சி, கோவை   ஈ) உதகை, திருச்சி, புதுவை, கோவை

10. ஆண் குழந்தையை “ வாடிச் செல்லம் “ என்று கொஞ்சுவது

அ) பால் வழுவமைதி          ஆ) திணை வழுவமைதி      

இ) மரபு வழுவமைதி          ஈ) கால வழுவமைதி

11. ‘ மொழி ஞாயிறு ‘ – என்றழைக்கப்படுபவர் யார்?

அ) தமிழழகனார்      ஆ) கம்பர்      இ) தேவநேயப் பாவாணர்              ஈ) வைரமுத்து

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;

இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்

வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்

சொல்லா தனசில சொல்லிட முனைவேன்”

12) இப்பாடலை இயற்றியவர்

அ) கண்ணதாசன்             ஆ) பாரதியார்           இ) வண்ணதாசன்             ஈ) பாரதிதாசன்

13) இப்பாடலில் கவிஞருக்கு உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.

அ) வண்டு                        ஆ) காற்று              இ) அன்னம்                      ஈ) மழை

14. பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க

அ) தருவேன் - தட்டுவேன்                    ஆ) உண்டா - வண்டா       

இ) இல்லா – இல்லம்                              ஈ)  சொல்லா - சொல்லிட

15) பாடல் இடம்பெற்றுள்ள கவிதையின் பெயர்_____

அ) ஞானம்    ஆ) காலக்கணிதம்   இ) பூத்தொடுத்தல்    ஈ) சித்தாளு

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                          4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..

16. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

17.கரப்பிடும்பை இல்லார் – இத்திருக்குறள் தொடரின் பொருள் எழுதுக.

18. அவையம் – குறிப்பு வரைக.

19. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ) ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனேயே உதவி செய்பவர் சான்றோர்.

ஆ) பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பு உதவுகிறது.

20. ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் இரண்டினை எழுதுக.

21.  ‘ முயற்சி ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                               5×2=10

22. தீதின்றி வந்த பொருள் – இத்திருக்குறள் அடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக

23. கீழ் வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

அ) உழவர்கள் மலையில் உழுதனர்         

ஆ) முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

24.  வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும், பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

25. பாலகுமாரன் புதினங்கள் இருக்கிறதா?என்று நூலகரிடம் வினவுவது எவ்வகை வினா

பிரபஞ்சன் புதினங்கள் இருக்கிறது என்று நூலகர் கூறுவது எவ்வகை விடை?

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடரில் விடுபட்ட சொற்கள் குறிக்கும் வண்ணங்களின் பெயர்களை எழுதுக.

கண்ணுக்கு குளுமையாக இருக்கும் ________ புல்வெளிகளில் கதிரவனின் _____ வெயில் பரவிக் கிடக்கிறது.

26. கலைச்சொல் தருக:- அ) CONSULATE ஆ)  FOLK LITERATURE

27. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.

28 இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

( அ ) விடு – வீடு               ( ஆ ) கொடு – கோடு

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 ) பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                               2×3=6

29. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் நெல்லிலோ. செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரை வாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும்?

ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.

இ) தமிழ்நாட்டின் நெல்லின் வகைகளை எழுதுக.

30 இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை முன்வைத்து எழுதுக..

31. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                   2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. நெடுநாளாக பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக எழுதுக.

33. மருவூர்ப் பாக்க கடைத்தெருவையும்,உங்கள் ஊரில் உள்ள கடைத்தெருவையும் ஒப்பிட்டு மூன்று தொடர்கள் எழுதுக.

34.  அடிபிறழாமல் எழுதுக

அ) “ தண்டலை மயில்க ளாட“ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்      (அல்லது )

ஆ) “ தூசும் துகிரும் “ – எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                        2×3=6

35. ‘ கண்ணே கண்ணுறங்கு!

    காலையில் நீயெழும்பு!

    மாமழை பெய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

    பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

36.தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

     வேளாண்மை என்னும் செருக்கு  – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

37.“ வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

      கோலொடு நின்றான் இரவு“  - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                       5×5=25

38. அ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

          கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

          புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

          பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

          இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

          இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

          ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

          அவனும் யானுமே அறிந்தவை;அறிக!      -கண்ணதாசன்.        ( அல்லது )

ஆ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

39. புதிததாகத் திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்குத் திறன்பேசியின் பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறிக் கடிதம் எழுதுக.   ( அல்லது )

 ஆ.’ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்’ – குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அதற்குத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெறக் கடிதம் ஒன்று எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தைக் கவினுற எழுதுக.


41. சேலம் மாவட்டம், திரு.வி.க. நகர், புதுதெரு, எண்-40 இல் வசிக்கும் இளமாறனின் வளர்ப்பு மகன் செங்கோடன் கிளை நூலகத்தில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை செங்கோடனாக கருதிக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியான படிவத்தை தேர்வு செய்து நிரப்புக.

42. அ) வானொலி அறிவிப்பு....

          ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மேற்கண்ட அறிவிப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக    ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the steets.It is performed by rural artists.The stories are derived from epics like Ramayana,Mahabharatha and other ancient puranas.There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe.Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup.Koothu is very popular amoung rural areas.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

        கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத்  நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?

( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?

( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?

( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                          3×8=24

43.அ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.( அல்லது )

ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

44. அ) இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனித நேயத்தை விவரிக்கவும்.  ( அல்லது)

ஆ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

         பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை விவரிக்கவும்

45. அ) குறிப்புகளைக் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் தலைப்பில்   கட்டுரை ஒன்று எழுதுக.

முன்னுரை –. நிலம்,நீர் மாசு – காற்று, வளி மாசு – சுற்றுச்சூழல் மாசும் மனித குலத்திற்கான கேடும் – விழிப்புணர்வு - முடிவுரை  ( அல்லது )

ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

முன்னுரை – அரசுப் பொருட்காட்சி அமைவிடம் – பல்வித அரங்குகள் – நடைபெற்ற நிகழ்ச்சிகள் – பொழுது போக்கு விளையாட்டுகள் – பயனுள்ள அனுபவம் - முடிவுரை.