Advertisement

திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.

 


சகாதேவன் கதை சுருக்கம்

முன்னுரை:

ஒரு ஆசிரியர் விதைத்த நல்லொழுக்க விதைகள் எவ்வாறு மாணவன் சகாதேவனின் வாழ்க்கையை மாற்றியது என்பதை இக்கதை விளக்குகிறது.

கதை:

  • ஒரு சிற்றூர் பள்ளி ஆசிரியர் தன் வேட்டியை துவைத்து காய வைத்திருந்தார். அது காணாமல் போனது.
  • ஊர் மக்கள் சிகாமணி என்ற திருடன் தான் அதை திருடினான் என்று கூறினார்கள். சிகாமணியின் மகன் சகாதேவன் அந்த பள்ளியில் படித்தான்.

திருக்குறள் வகுப்பு:

  • அன்று ஆசிரியர் "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு" என்ற திருக்குறளை நடத்தினார்.
  • நல்ல குணம் தான் உண்மையான குடிப்பிறப்பு என்று விளக்கினார்.

சகாதேவன் செயல்:

  • மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்ற ஆசிரியர், தன் வேட்டியுடன் கிருஷ்ணமூர்த்தி என்பவனை பார்த்தார்.
  • சகாதேவன் தான் தன் தந்தையிடம் இருந்து வேட்டியை வாங்கி கொடுத்து அனுப்பியதாக கிருஷ்ணமூர்த்தி கூறினான்.
  • ஊர் மக்கள் சிகாமணியை தண்டிக்க விரும்பினர்.

ஆசிரியரின் எண்ணம்:

  • சகாதேவனின் நல்லொழுக்கத்தால் தான் திருட்டு வெளிப்பட்டது.
  • சிகாமணிக்கு தண்டனை என்றால், சகாதேவனும் பாதிக்கப்படுவான் என்று கருதி, ஆசிரியர் தண்டனையை ஏற்கவில்லை.

முடிவுரை:

திருக்குறளின் வழி நடந்த சகாதேவன் நல்லொழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறான்.