Advertisement

Score High in 10th Tamil: Master One-Word Answers (2024)

10TH-TAMIL-2023-24-PUBLIC MODEL QUESTION - 1

அரசு பொதுத் தேர்வு - 2024

பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம் 

 தமிழ் – மாதிரி வினாத்தாள் – 1

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

          ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                          15×1=15

1.உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ) உதியன்;சேரலாதன்                         ஆ)  அதியன்;பெருஞ்சாத்தன்  

இ)  பேகன் ; கிள்ளிவளவன்                    ஈ)  நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

2. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு

அ) கூவிளம் தேமா மலர்                        ஆ) கூவிளம் புளிமா நாள்

இ) தேமா புளிமா காசு                             ஈ) புளிமா தேமா பிறப்பு

3.மரபுத் தொடருக்கான பொருளைத் தேர்க. “ கண்ணும் கருத்தும் “ 

அ) வேகப்படுத்துதல்                              ஆ) கற்பனை செய்தல்                 

இ) முழு ஈடுபாட்டுடன் செய்தல்              ஈ) ஆற்றில் இறங்குதல்

4. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

  மானவனுக்கு வகுப்பது பரணி – இச்செய்யுள் அடியில் இடம் பெற்றுள்ள எண்ணுப் பெயர்களின் தமிழ் எண்ணைத் தேர்க.

அ) க000                 ஆ) ங00                 இ) அ00                 ஈ) எ000

5. ‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-

அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்                     ஆ) மிகுந்த செல்வம் உடையவர்    

இ) பண்பட்ட மனித நேயம்                                         ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

6. சிரித்துப் பேசினார் – இத்தொடருக்குரிய அடுக்குத் தொடரை தேர்க.

அ) சிரித்துக் கொண்டே பேசினார்             ஆ) சிரிப்பதால் பேசினார்     

இ) சிரித்துச் சிரித்துப் பேசினார்                 ஈ) சிரிப்புடன் பேசினார்

7. உயிரைவிடச் சிறப்பாக பேணிக் காக்கப்படும் – பொருளுக்கேற்ற திருக்குறள் அடியைத் தேர்க

அ) நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று        ஆ) ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை                 

இ) உயிரினும் ஓம்பப் படும்                      ஈ) எய்துவர் எய்தாப் பழி

8. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

அ) வேற்றுமை உருபு         ஆ) எழுவாய்           இ) உவம உருபு       ஈ) உரிச்சொல்

9. ஜப்பான் உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயரைத் தேர்ந்தெடுக்க.

அ) இலா       ஆ) பெப்பர்    இ) வேர்டுஸ்மித்       ஈ) வாட்சன்

10. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___

அ) இலையும்,சருகும்          ஆ) தோகையும் சண்டும்     

இ) தாளும் ஓலையும்          ஈ) சருகும் சண்டும்

11. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்___

அ) நாட்டைக் கைப்பற்றல்             ஆ) ஆநிரை கவர்தல்         

இ) வலிமையை நிலைநாட்டல்      ஈ) கோட்டையை முற்றுகையிடல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ எமது உயிர் – நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு

நன்றாக வீசு,

சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்

நின்று வீசிக் கொண்டிரு

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்

உன்னை வழிபடுகின்றோம்”

12) இப்பாடலை இயற்றியவர்

அ) பாரதிதாசன்                 ஆ) பாரதியார்           இ) வைரமுத்து                 ஈ) சுரதா

13) ‘ லயத்துடன் ‘ – பொருள் தருக.

அ) சீராக                          ஆ) வேகமாக          இ) அழுத்தமாக                 ஈ) மெதுவாக

14. சீர் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

அ) நெருப்பு - தருமாறு                          ஆ) அவித்துவிடாதே – மடித்துவிடாதே    

இ) பாட்டுகிறோம் - கூறுகிறோம்             ஈ)  சக்தி – குறைந்து

15) பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எழுதுக

அ) நெருப்பு - நீடித்து         ஆ) அதனை - அவித்து     

இ) பாட்டுகள் – பாடுகிறோம் ஈ) பாடுகிறோம் - கூறுகிறோம்


10TH-TAMIL-2023-24-PUBLIC MODEL QUESTION - 2

அரசு பொதுத் தேர்வு – 2024 / பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம் 

 தமிழ் – மாதிரி வினாத்தாள் – 2

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

          ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.                                  பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                          15×1=15

1. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ________

அ) குலை வகை ஆ) மணிவகை இ) கொழுந்து வகை ஈ) இலை வகை

2. பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும். இப்புதிருக்கான சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

அ)  நவீனம்            ஆ) புரட்சி               இ) போராட்டம்                  ஈ) புதுமை

3. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______

அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்                ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்     

இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்               ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

4. “ பிரிந்தன புள்ளின் கானில்

    பெரிதழுது இரங்கித் தேம்ப     - பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க

அ) கிளை, துளை ஆ) நிலம்,வாட     இ) காடு,வாட          ஈ) காடு,  நிலம்

5. பெயரெச்சத் தொடரை தேர்க.

அ) இனியன் கவிஞர்                    ஆ) குயில் கூவியது

இ) அன்பால் கட்டினார்                ஈ) கேட்ட பாடல்

6. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா                 ஆ) சீலா                 இ) குலா       ஈ) இலா

7. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

     நாள்தொறும் நாடு கெடும் – சீர்மோனைச் சொற்களைத் தேர்க

அ) நாடி - முறைசெய்யா    ஆ) நாள்தொறும் - மன்னவன்                

இ) நாள்தொறும் - முறை    ஈ) நாள்தொறும் - நாடி

8. பழமொழியைப் பொருத்துக:-

அ) ஆறில்லா ஊருக்கு      -        1. சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஆ) உப்பில்லாப் பண்டம்     -        2. நூறு வயது

இ) நொறுங்க தின்றால்       -        3. குப்பையிலே

ஈ) ஒரு பானை                  -        4. அழகு பாழ்

அ) அ-4. ஆ-1, இ-3, ஈ-2            ஆ) அ-4, ஆ-3, இ-2, ஈ-1

  இ) அ-2, ஆ-4, இ-1, ஈ-3           ஈ) அ-3, ஆ-1, இ-4, ஈ-2

9. திருச்சிராப்பள்ளி,கோயம்புத்தூர்,புதுச்சேரி,திருநெல்வேலி – இவ்வூர்ப் பெயர்களின் சரியான ‘ மரூஉ ‘ வரியைத் தேர்க.

அ) திருச்சி, புதுவை, நெல்லை, உதகை    ஆ) திருச்சி , கோவை, புதுவை, நெல்லை

இ) நெல்லை, உதகை, திருச்சி, கோவை   ஈ) உதகை, திருச்சி, புதுவை, கோவை

10. ஆண் குழந்தையை “ வாடிச் செல்லம் “ என்று கொஞ்சுவது

அ) பால் வழுவமைதி          ஆ) திணை வழுவமைதி      

இ) மரபு வழுவமைதி          ஈ) கால வழுவமைதி

11. ‘ மொழி ஞாயிறு ‘ – என்றழைக்கப்படுபவர் யார்?

அ) தமிழழகனார்      ஆ) கம்பர்      இ) தேவநேயப் பாவாணர்              ஈ) வைரமுத்து

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;

இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்

வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்

சொல்லா தனசில சொல்லிட முனைவேன்”

12) இப்பாடலை இயற்றியவர்

அ) கண்ணதாசன்             ஆ) பாரதியார்           இ) வண்ணதாசன்             ஈ) பாரதிதாசன்

13) இப்பாடலில் கவிஞருக்கு உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.

அ) வண்டு                        ஆ) காற்று              இ) அன்னம்                      ஈ) மழை

14. பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க

அ) தருவேன் - தட்டுவேன்                    ஆ) உண்டா - வண்டா       

இ) இல்லா – இல்லம்                              ஈ)  சொல்லா - சொல்லிட

15) பாடல் இடம்பெற்றுள்ள கவிதையின் பெயர்_____

அ) ஞானம்    ஆ) காலக்கணிதம்   இ) பூத்தொடுத்தல்    ஈ) சித்தாளு

10TH-TAMIL-2023-24-PUBLIC MODEL QUESTION - 3

AZAZ TUITION CENTRE KALAKAD

அரசு பொதுத் தேர்வு – 2024 / பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம் 

 தமிழ் – மாதிரி வினாத்தாள் – 3

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                  மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

       ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.                                  பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                      15×1=15

1. ‘ சாகும் போது தமிழ் படித்துச் சாக வேண்டும் - என்றன்

சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் ‘ – என்று கூறியவர்..

அ) திரு.வி.க    ஆ) க.சச்சிதானந்தன்                 இ) நம்பூதனார்      ஈ) தனிநாயக அடிகள்

2. தேர்ப்பாகன் – இத்தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.

அ) வினைத்தொகை ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இ) பண்புத் தொகை ஈ) இருபெயரொட்டுப் பண்புத் தொகை

3. ‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்      

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்        

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும் 

ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

4. “ கத்துங் குயிலோசை – சற்றே வந்து

  காதிற் படவேணும் “ – பாரதியார்.   - இப்பாடலடியில் இடம் பெற்றுள்ள வழுவமைதி

அ) திணை வழுவமைதி           ஆ) பால் வழுவமைதி

இ) மரபு வழுவமைதி                ஈ) கால வழுவமைதி

5. “ நாற்றிசையும் செல்லாத நாடில்லை” “ ஐந்துசால்பு ஊன்றிய தூண்” – இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.

அ) நான்கு , ஐந்து – ௪ ,௫           ஆ) மூன்று, நான்கு – ௩ , ௪ 

இ) ஐந்து , ஏழு – ௫ , ௭               ஈ) நான்கு , ஆறு – ௪, ௬ 

6. “ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை “ – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?________

அ) தமிழ்   ஆ) அறிவியல்     இ) கல்வி  ஈ) இலக்கியம்

7. பாடி மகிழ்ந்தனர் – எவ்வகைத் தொடர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) பெயரெச்சத் தொடர்            ஆ) வினையெச்சத் தொடர்

இ) வேற்றுமைத் தொடர்           ஈ) விளித் தொடர்

8. ஓர் ஆண்டின் மொத்த மாதங்களின் எண்ணிக்கையினைக் குறிக்கும் தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க.

அ) ௧ ௫     ஆ) ௧ ௨    இ) ௧ ௩     ஈ) ௧ ௪ 

9.பரிபாடல் அடியில் ‘ விசும்பும் இசையும் ‘ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்   ஆ) வானத்தையும், புகழையும்

இ) வானத்தையும் பூமியையும்  ஈ) வானத்தையும் பேரொலியையும்

10. கல் – கூட்டப் பெயரைத் தேர்க

அ) கட்டு         ஆ) குலை       இ) குவியல்      ஈ) தாறு

11. சீவலமாறன் என்ற பட்டப்பெயர் கொண்டவர்

அ) பெருஞ்சித்திரனார்   ஆ) தமிழழகனார் இ) தேவநேயப் பாவாணர் ஈ) அதிவீரராம பாண்டியர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ உய்முறை அறியேன்; ஓர்ந்த

  உணர்வினொத்து உறுப்பும் இல்லா

மெய்முறை அறியேன்; மெய்தான்

  விரும்பிய உணவு தேடச்

செய்முறை அறியேன்; கானில்

  செல்வழி அறியேன்; தாய்தன்

மைமுறை அறிந்தேன் தாயும்

   கடிந்தெனைத் தனித்துப் போனாள் ”

12) இப்பாடலின் ஆசிரியர்

அ) தமிழழகனார்                ஆ) பாரதியார்       இ) வீரமாமுனிவர்          ஈ) பாரதிதாசன்

13) இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ) கம்பராமாயணம்        ஆ) தேம்பாவணி      இ) சிலப்பதிகாரம் ஈ) காசிக்காண்டம்

14. பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களைத் தேர்க

அ) உய்முறை - உணர்வு               ஆ) மெய்முறை – செல்வழி 

இ) மெய்முறை - செய்முறை             ஈ)  தாய் - கடிந்தெனை

15) செய்முறை என்பதன் இலக்கண குறிப்பு தருக_____

அ) வினைத்தொகை       ஆ) தொழில் பெயர்   இ) வினைமுற்று ஈ) பெயரெச்சம்

10TH-TAMIL-2023-24-PUBLIC MODEL QUESTION - 4

அரசு பொதுத் தேர்வு – 2024 / பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம் 

 தமிழ் – மாதிரி வினாத்தாள் – 4

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

          ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.                                  பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                          15×1=15

1. காலம் கரந்த பெயரெச்சம்’ என்பது ____________                                   

அ) வினைத்தொகை          ஆ) உம்மைத்தொகை        

இ) பண்புத்தொகை            ஈ) அன்மொழித்தொகை

2. .’ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

அ) திருத்தணியும்,திருப்பதியும்       ஆ) திருப்பரங்குன்றமும் பழனியும்

இ) திருப்பதியும் திருத்தணியும்       ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்

3. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

4. கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.

மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்

அ) மலைமீது மழை பெய்து ஆற்றுவெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.

ஆ) கருத்த மேகம் மலை மீது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.

இ) திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.

ஈ) மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.

5. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்________

அ) தமிழழகனார்                ஆ) அப்பாத்துரையார்          

இ) தேவ நேய பாவாணர்      ஈ) இரா.இளங்குமரனார்

6. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….

அ) உழவு,மண்,ஏர்,மாடு                ஆ) மண்,மாடு,ஏர்,உழவு          

இ) ஏர்,உழவு,மாடு,மண்                 ஈ) உழவு,ஏர்,மண்,மாடு

7. ‘ சங்க இலக்கியங்கள்,ஐந்திணைகளுக்குமான ஒழுக்கங்களை இரு திணைகளும் பெற எடுத்தியம்புகின்றன” – இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான விரியைக் கண்டறிக.

அ) குறிஞ்சி,முல்லை,செய்தல்,பாலை – நல் வினை, தீ வினை

ஆ) குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை – உயர்திணை,அஃறிணை

இ) குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை,மருதம் – அறம்,பொருள்,இன்பம்

ஈ) குறிஞ்சி,மருதம்,மலை,காடு,வயல் – பனை, திணை 

8. ‘ மலர்கள் தரையில் நழுவும் ‘ எப்போது?

அ. அள்ளி முகர்ந்தால்                  ஆ. தளரப் பிணைத்தால்                

இ. இறுக்கி முடிச்சிட்டால்             ஈ. காம்பு முறிந்தால் 

9. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ___________

அ) திரு.பிரகாசம்     ஆ) மார்ஷல்.ஏ.நேசமணி     இ) தனிநாயகம் அடிகள்      ஈ) ந. முத்துசாமி

10. “ காற்றுள்ள போதே தூற்றிக் கொள் “ – இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள்

அ) காலம் வருமென்று காத்திருந்தால் செயல் கெட்டு விடும்

ஆ) உரிய காலத்தில் ஒரு செயலை முழுமையாகச் செய்து விட வேண்டும்.

இ) உரிய காலத்தில் காற்றைப் போல செயல்பட வேண்டும்.

ஈ) உரிய காலத்தில் உணர்ந்து உரிய செயலைத் தேட வேண்டும் 

11. ‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் ‘ இவ்வடி குறிப்பது 

அ. காலம் மாறுவதை          ஆ. வீட்டைத் துடைப்பதை இ. இடையறாது அறப்பணி செய்தலை

ஈ. வண்ணம் பூசுவதை

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

“ அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,

 கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து 

சேந்த செயலைச் செப்பம் போகி,

அலங்கு கழை நரலும்  ஆரிப்படுகர்ச்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்ப்டு நோன்தாள்

மான விறல்வேள் வயிரியம் எனினே,”

12. ‘ அசைஇ’ இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு

அ. வினைத்தொகை ஆ. பண்புத்தொகை  இ. சொல்லிசை அளபெடை     ஈ. செய்யுளிசை அளபெடை

13. ‘ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ – இவ்வடியில் ‘ பாக்கம் ‘ என்னும் சொல்லின் பொருள்

அ. சிற்றூர்     ஆ. பேரூர்     இ. கடற்கரை           ஈ. மூதூர்

14. பாடல் இடம் பெற்ற நூல்

அ. சிலப்பதிகாரம்     ஆ. முல்லைப்பாட்டு இ. மலைபடுகடாம்    ஈ. காசிக்காண்டம்

15. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

அ. அன்று,கன்று,அலங்கு,சிலம்பு            ஆ. அன்று,அவண்,அசைஇ,அல்கி

இ. சேந்த,செயலை,செப்பம்,சிலம்பு           ஈ. அல்கி,எய்தி,போகி,எனினே

10TH-TAMIL-2023-24-PUBLIC MODEL QUESTION - 5

அரசு பொதுத் தேர்வு – 2024 / பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம் 

 தமிழ் – மாதிரி வினாத்தாள் – 5

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் :

1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்  உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

          ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.                                  

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                          

பகுதி – I  (மதிப்பெண்கள் : 15)             15×1=15

1. எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான சொல்_____

அ) எள்கசடு  ஆ) பிண்ணாக்கு               இ) ஆமணக்கு                  ஈ) எள்கட்டி

2. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற  தொடர்-------

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது   ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்  ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

3. ‘ சிவப்புச் சட்டை ‘ பேசினார் – அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை  ஆ) உவமைத்தொகை       இ) அன்மொழித்தொகை   ஈ) உம்மைத்தொகை

4. "விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்" இத்தொடரில் 'வேறார்'  என்ற சொல் குறிப்பது

அ) வேற்று மொழியார்         ஆ) வேண்டியவர்     இ) வேறு ஒருவர்      ஈ) வெற்றியாளர்

5. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

6. சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.இத்தொடரில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான வேறு சொற்களை எழுதுக.

அ) பூஞ்சோலைகள் – அரும்புகள்            ஆ) மலை – எறும்புகள் – தேன்

இ) பூஞ்சோலையில் – வண்டுகள் – தேன் ஈ) கானகம் – வண்டுகள் - நீர்

7. வினைமுற்றுத் தொடரைத் தேர்க

அ) பாடிய கவிஞர்   ஆ) பாடினார் கவிஞர்  இ) கவிஞர் பாடினார்  ஈ) பாடும் கவிஞர்

8. தமிழனத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி. கருதியது ___________

அ) திருக்குறள்                 ஆ) புறநானூறு                  இ) கம்பராமாயணம்            ஈ) சிலப்பதிகாரம்

9 . ‘ கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது ‘ – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ___________

அ) பாடிய ; கேட்டவர்          ஆ) பாடல் ; பாடிய     இ) கேட்டவர் ; பாடிய ஈ) பாடல் ; கேட்டவர்

10. இருபாலருக்கும் பொதுவான பிள்ளைத்தமிழ் பருவத்தைத் தேர்ந்தெடுக்க

அ) சிற்றில்  ஆ) சிறுதேர்  இ) சப்பாணி  ஈ) அம்மானை

11. குலசேகர ஆழ்வார் “ வித்துவகோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

    பூனையார் பால் சோற்றைக் கண்டதும் விரைந்து வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே-

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி          ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி          ஈ) கால வழுவமைதி, இட வழுவமதி

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக

"ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ

வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாளோ

தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல் அன்றோ

ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ"

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

(அ) தேம்பாவணி  (ஆ) பெருமாள் திருமொழி  (இ) கம்பராமாயணம்   (ஈ) சிலப்பதிகாரம்

13. இப்பாடலின் ஆசிரியர்

(அ) இளங்கோவடிகள்  (ஆ) செய்கு தம்பி பாவலர் (இ) கம்பர்      ஈ) வீரமாமுனிவர்

14. நெடுந்திரை – இலக்கணக் குறிப்பு தருக.

(அ) உவமைத் தொகை  (ஆ) பண்புத் தொகை   (இ)  உம்மைத் தொகை  (ஈ) வினைத்தொகை

15. இப்பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக

(அ) நெடுந்திரை – போவாரோ        (ஆ) நெடுந்திரை – நெடும்படை

  (இ) தோழமை – ஏழமை                (ஈ) போவாரோ - வில்லாளோ

10TH-TAMIL-2023-24-PUBLIC MODEL QUESTION - 6

அரசு பொதுத் தேர்வு – 2024 / பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம் 

 தமிழ் – மாதிரி வினாத்தாள் – 6

மொழிப்பாடம் - பகுதி I - தமிழ்

கால அளவு : 3.00 மணி நேரம்                                                              மொத்த மதிப்பெண்கள் : 100

அறிவுரைகள் :

     (1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.

     (2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.

குறிப்புகள் : 

   (i)  இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

   (ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I  (மதிப்பெண்கள் : 15)

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                    15x1=15

             (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

1. கருணையன் என்பவர் _____________

அ) வீரமாமுனிவர்    ஆ) யோசேப்பு          இ) அருளப்பன்                 ஈ) சாந்தா சாகிப்

2. எழுகதிர்,முத்துப்பல் – இச்சொற்களில் மறைந்துள்ள தொகைகள் முறையே _______

அ) வினைத்தொகை,பண்புத்தொகை                ஆ) உவமைத்தொகை,வினைத்தொகை

இ) உவமைத்தொகை, வினைத்தொகை            ஈ) வினைத்தொகை, உவமைத்தொகை

3 பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா     ஆ) சீலா    இ) குலா    ஈ) இலா

4. புதிருக்கான விடையை வரிசைப்படி தேர்ந்தெடுக்க.

     தவழும்போது ஒரு பெயர்

    விழும்போது ஒரு பெயர்

    உருளும்போது ஒரு பெயர்

    திரண்டோடும் போது ஒரு பெயர் – அவை என்ன?

அ) நீர்,மழை,ஆறு,ஓடை               ஆ) மேகம்,மழை,நீர்,வெள்ளம்.

இ) மாரி,கார்,நீர், புனல்                   ஈ) மழை,புனல்,மேகம்,நீர்

5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?

(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்  (ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்   (ஈ) அங்கு வறுமை இல்லாததால்

6. கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க. 

      (மலை, மழை, மேகம், ஆறு, ஏரி, குளம்)

அ. மலைமீது மழை பெய்து ஆற்று வெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.

ஆ. கருத்த மேகம் மலைமீது மழையைப் பொழிய ஆறு, ஏரி, குளம், அனைத்தும் நீரால் நிரம்பி

இ. திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு, ஏரி, குளங்களில் நிறைந்தன. 

ஈ. மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.

7. ”உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;

      இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்”    எனப்பாடியவர்  யார்?

அ) கம்பர்   ஆ) தமிழழகனார்  இ) பெரிஞ்சித்திரனார்  ஈ) கண்ணதாசன்

8. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது

அ. தொழிற்பெயர்  ஆ. முதனிலை திரிந்த தொழிற்பெயர் 

இ. முதனிலைத் தொழிற்பெயர்   ஈ. வினையாலணையும் பெயர் 

9 . காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன                                                                            

அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்                               

10. வெட்டிய மரங்களுக்கு ஈடாக ____________ நட்டனர்.

அ) கொடிகளை                ஆ) நாற்றுகளை      இ) மரங்களை                   ஈ) மரக்கன்றுகளை

11. எர்லி மார்னிங் எழுந்து வாக்கிங் சென்று வந்து டீ குடித்த அம்மா, நீயூஸ் பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார். - இத்தொடரில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச்சொல் வரிசையைத் தேர்க.

அ.வைகறை, நடைப்பயிற்சி, பத்திரிக்கை, தேநீர்   ஆ. அதிகாலை, நடந்து, தேநீர்,பத்திரிக்கை

இ. காலை, நடை, தேநீர், செய்தி       ஈ. வைகறை, நடைப்பயிற்சி தேநீர், செய்தித்தாள்

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக

‘ முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

 மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு “

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. நற்றிணை         ஆ. முல்லைப்பாட்டு           இ. குறுந்தொகை     ஈ.தனிப்பாடல் திரட்டு

13. பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான அணி

அ. இரட்டுற மொழிதல் அணி         ஆ, தீவக அணி          

இ. வஞ்சப்புகழ்ச்சி அணி               ஈ. நிரல் நிறை அணி

14. தமிழுக்கு இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது

அ. சங்கப் பலகை               ஆ. கடல்                 இ. அணிகலன்                  ஈ. புலவர்கள்

15. தொழிற்பெயர் அல்லாத சொல்

அ. துய்ப்பதால்          ஆ. அணிகலன்                 இ. மேவலால்           ஈ. கண்டதால்



10th Tamil Exam,

Tamil one-word answers,

Tamil revision,

Tamil exam success,

Tamil exam mastery,

10th standard Tamil,

Tamil public exam,

High-scoring Tamil answers,

2024 Tamil exam,

Tamil exam confidence,