"வெளியாகவிருக்கும் பெரிய நடிகர்களின் படங்களில், அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய கருத்துக்கணிப்பு!
விக்ரம் நடிக்கும் 'வீரதீர சூரன்', அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி', லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி', கமல் நடிக்கும் 'தக் லைஃப்', மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' ஆகிய படங்கள் வரிசையில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், ரசிகர்கள் எந்த படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கருத்துக்கணிப்பில் ரசிகர்கள் மத்தியில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்குத்தான் முதலிடம். ரசிகர்கள் இந்தப்படத்திற்காகத் தான் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அடுத்தபடியாக, அஜித்தின் 'குட் பேட் அக்லி' இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும், ரஜினியின் கூலி படம் மூன்றாம் இடத்தில் உள்ளது. கடைசியாக, கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திற்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது. சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா படம் தோல்வியடைந்தாலும், ரசிகர்கள் ரெட்ரோ படத்திற்கு காட்டும் ஆர்வம் வியப்பாக இருக்கிறது."